“வாணிக மரபின் வருபொருள் ஈட்டி
நீன்நிதிச் செல்வனாய் நீணில வேந்தனில்
எட்டிப் பூப் பெற்று … “
– மணிமேகலை

2. பந்தலிலே படர்ந்த கொடி

 

“காடு வெட்டிப் போட்டுக்

கடிய நிலம் திருத்தி

வீடு கட்டிக் கொண்டிருக்கும்

வேள் வணிகர் வீடுகள்…”

 

எனப் “பாடுவார் முத்தப்பச் செட்டியார்” என்னும் செட்டி நாட்டுப் பாவலர் பாடியுள்ளார்.  அந்த வேள் வணிகர்களில் தமிழ்நாட்டில் பல்வேறு பிரிவினர் உள்ளனர்.  நாஞ்சில் நாட்டின் ஈழவச் செட்டியார்கள், மதுரைப் பகுதியின் 24 மனைச் செட்டியார்கள், சேலம், திருச்சி மாவட்டங்களில் அசுர வெள்ளன் செட்டியார்கள், தேவாங்கச், சாதுச் செட்டியார்கள், ஆரிய வைசியர் எனப்பெறும் 102 கோத்திரக் கோமுட்டிச் செட்டியார்கள், செட்டிநாட்டின் நாட்டுக்கோட்டை நகரத்தார்கள், ஆயிரவைசியர் எனம் பதினெட்டுப் பிரிவினர்… எனப் பல்வேறு மரபினர் வாழ்கின்றனர்.  இவர்களுள் தமிழகமெங்கும் பரவி வாழ்பவர் – ஆயிர வைசியர்கள்.

சுமூக உருவாக்கக் காலம் முதல், நினைப்பிற்கெல்லாம் எட்டாத நெடுங்காலத்திற்கு முன்னர் இதிகாச, புராண காலத்திலேயே மகரிஷி ஒருவரின் வழித் தோன்றலாக ஆயிர வைசிய மரபு ஆக்கப்பட்டது.  நாளடைவில் இம்மரபினர், தாம் செய்த தொழில், வாழ்ந்த இடம் ஆகியவற்றிற்கு ஏற்றவாறு பதினெட்டுப் பிரிவினராகப் பெயர்சூட்டி அழைக்கப் பட்டனர். மஞ்சப்புத்தூர், காசுக்காரர், சோழியர், நகரம், சமயபுரம், பஞ்சுபுரம், பக்காமணி, துவரங்கட்டி, தாராபுரம் எனபள பதினெட்டுப் பிரிவுகளுள் குறிப்படத்தக்கவை.

“மன்னர் பின்னோர்” எனப் போற்றப்பட்ட இம்மரபினர் – மன்னர்களின் விருதுகளைப் பெற்று தசாங்கத்தோடு கொடி உயர்த்தி வாழ்ந்த வரலாறுகள் உண்டு; செவி வழிச் செய்திகள் பலஉண்டு. நாவாரப்பாடிப் பாராட்டும் நாட்டுப் பாடல்கள் பற்பல உண்டு.  சோழப் பேரரசரின் அவையில் நடந்த சீர்த்திமிகு சம்பவம் இது:

“ஒரு யானையின் எடையைத் தராசில் வைத்து நிறுக்காமல் கூறிவிட முடியுமா எனச் சோழ மன்னன் புதிர் போட்டான்.  புதிர் விடுவிக்க யாராலும் முடியவில்லை.  ஆனால், வைசியர்கள் இப்புதிரை விடுவிக்க முன் வந்தனர்.  யுhனையைப் படகில் ஏற்றி, படகு நீரில் அமிழும் அளவைப் படகின்மீது குறித்துக் கொண்டனர்.  பின்னர் யானையைப் படகில் இருந்து இறக்கி, படகில் போடப்பட்ட குறியின் அளவுக்கு, படகு அமிழும்வரை கற்களை ஏற்றினர்.  பின்னர், கற்களின் எடையைக் கணக்கிட்டு யானையின் எடையைக் கூறினர்.  அவர்களது மதி நுட்பத்தை வியந்து மன்னன் விருதுகள் வழங்கினான்” (“ஆயிரவைசியர் மரபும் குலச் சடங்குகளும்”- எனும் ஆய்வேடு-பேரா-பாமணி).

 

முடக்கு மாணிக்கக் கதை:

சோழ மன்னனுக்கு முடக்கு மாணிக்கம் ஒன்று கிடைத்தது.  ஆனால் அந்த முடக்கு மணியின் மூன்று புறங்களிலு;ம துராரங்கள் தொடர்ந்து சென்றன.  ஆதை யாராலும் கோர்க்க முடியவில்லை.  ஆப்படிக் கோர்ப்பவர்களுக்குத் தக்க பரிசு தருவதாக அறிவித்தும் அதில் நூலைக் கோர்க்க எவரும் முன் வரவில்லை.  ஆயிரவைசிய சமூகத்தாரை அழைத்து நீங்கள்தான் கோர்த்துத்தர வேண்டும்மென மன்னன் கட்டளையிட்டார்.  ஆவர்களாலும் இயலாது மயங்கி நின்ற நேரத்தில் செட்டி குலப் பெண் ஒருத்தி முன் வந்தாள்.  நூலின் நுனியில் தேனைத் தடவி அதனை, மாணிக்கத் துரார நுழைவாயிலில் வைக்க, ஒரு சிற்றெறும்பு அந்நூலை இழுத்துக் கொண்டு துராரங்களின் வழியே உள்ளே சென்று, வெளியே நூலுடன் வந்து விட்டது.

சிந்தையுயர்ச்சி சிற்றெறும்பால்

கோர்வையிட்டாள்”

என ஓலைச் சுவடியில் உள்ளது. (ஆயிரவைசியர் 5-ஆம் மாநாட்டு மலர்)

“கடுகுதனில் எட்டில் ஒரு கூறு வரவு எனினும்

கணக்கு முறைதன்னில் வழுவார்……

———– எனத் திருவேங்கட சதகமும்

“ஈதல், யாகஞ் செய்தல், ஓங்கு பொருளீட்டல்

ஈதல், கோதனைக் காத்தல், ஏருழல்

                                                         -வைசியர் ஆறுதொழில”

என அண்ணாமலை சதகமும் ஆயிரவைசியர்களின் வாழ்வு முறைகளை நயமுற விளக்கியுள்ளன.  இம்மரபினரின் சிறப்புக்களைப் பேசும் இலக்கியங்களையும் செப்புப் பட்டயங்களையும் பேராசிரியர் பாமணி தம் ஆய்வேட்டில் தொகுத்துத்தந்துள்ளார்.

“அருகு நுனியனைய ஆயிரவர் கோத்திரரே

இருகை படைத்ததுவும் எதுக்கு? – ஒரு கை

மச்சம் உரைக்கும் கை, மற்ற கை கேட்போருக்கு

இச்சையுடன் ஈகின்ற கை….”

–              எனக் கம்பர் பாடியதாகக்

கூறப்படும் பாடல் ஒன்று உண்டு.  அருகு நுனியுள்ள ஆயிரவர் மரபில், பெருகு மனையறம் பேணும் ‘மஞசப்புத்தூர்’ எனும் மங்களப் பிரிபவில் வந்தவர் வீரபத்திரன் செட்டியர்.

இராமநாதபுர மாவட்டத்து ஏரியூருக்கு அருகில், பாண்டு குடியிலிருந்து 4 கல் தொலைவில் உள்ள சிறுகம்பையூர் வீரபத்திரரின் பூர்வீகம் என்றாலும் – பிழைப்புக் காரணமாகத் தஞ்சைத் தரணியில், திருவாரூரில் குடியேற நேர்ந்தது.  அவரது புதல்வர் கிரு~;ணன் மானாமதுரை, அழகுச் செட்டியாரின் புதல்வி மீனாட்சி அம்மனைக் கைப்பிடித்து விஜயபுரத்தை அடுத்த தப்பனாம்புலியூரில் இல்லறம் மேற் கொண்டார்.

 

திருவாரூர் தேடிக் கொண்ட பெருமை:

“தேரோடும் நெடுவீதித் திருவாரூர்” எனச் சேக்கிழாரால் பாடப்பெற்ற பெருமை மிகு திருத்தலம் ஆகும்.  தேரேறி ஈசன் திரிபுரம் எரித்து அழித்ததன் நினைவாக ஆண்டு தோறும தேரிழுத்துத் திருவோலக்கம் காணும் புணிணியத் தலம் திருவாரூர்.  அறியாப் பருவத்தே தேர் ஊர்ந்தபோது பசுவின் கன்றை அறியாமல் கொன்ற தன் மைந்தனை அழிவாய்த் தேர்க்காலில் இட்ட மனுநீதியும் மன்னவன் செங்கோலும் நிலைநின்ற வரவாற்றிடம் திருவாரூர்.  தில்லை நடராசப் பெருமாள் திருக்கோயிலுக்கெல்லாம் முன்னர் திருவாரூரான் ஆலயம் அமைந்து விட்டது என அப்பர் பெருமானால் பாடப்பெற்ற அருள்மாடம் திருவாரூர், சைவசமய குரவர்களான அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், ஞான சம்பந்தர் எனும் நால்வராலும் நாவரப் புகழ்ந்தேத்தப் பெற்ற திருவாரூரைச் சோழப் பேரரசர்கள் தமிழர் கலைக் கூடமாக்கினர்.  பின்னர் தஞ்சையை ஆண்ட நாயக்க, மராட்டிய மன்னர்கள் ஆய கலைகளை எல்லாம் அங்கு பேணி வளர்த்தனர்.  அந்த மண்ணில் அவதரித்த சங்கீத மும்மூர்த்திகளான தியாகராசர், முத்துச்சாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகிய மூவரும் ஈசனைப்பாடி இசை உலகுக்கே பெருமை தேடித்தந்தனர்.

“திருவாரூர்த தேரழகு, திருவிடை மருதூர் தெருவழகு, மன்னார்குடி மதிலழகு” என்பது தஞ்சை மாவட்டக் குக்கிராமங்களில் பேசப்படும் தொடர்மொழி.  திருவாரூர்த் தேர் தமிழ் நாட்டுத் திருக்கோவில் தேர்களில் எல்லாம் மிக உயர்ந்தது, காலம் செய்த அழிவையும் தாண்டி ஊர்ந்து வருவது.  108 அடி உயரமுடைய இத்தேருக்கு நிகராக உலகில் ஏதும் இல்லை எனும் பெருமைக்குரியது, அருமைப்பாடுடையது.

தியாகராசர் திருக்கோயிலால், அங்குள்ள கலைச்சிறப்பால், தீட்டப்பெற்ற பேசும் பொற்சித்திரங்களால், கூட்டம் சேர்க்கும் திருத்தேர் வலத்தால் அந்த வரலாற்றை – வாழும் சரித்திரமாக்கி வரும் அன்பர்களம் அந்த மண்ணில் தோன்றி வருவதுதான் – அந்த ஊருக்கு மறுபுறம் பெருமை தேடித்தந்து வருகிறது.

“திருவாரூரில் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்!” என்றார் தேவாரம் பாடிய சுந்தரர்.  அவர் இந்த நூற்றாண்டில் அங்குப் பிறந்து புது வரலாறு படைத்தவர்களையும் கருதியிருப்பார்- எனக் கொள்ள வேண்டுமானால் “திருவாரூரில் பிறப்பவர்கள் எல்லார்க்கும் அடியேன்”! என மட்டும் சற்றுத் திருத்தி வாசித்தால் போதும்.  திருவாரூரில் பிறந்தவர்கள் தமிழ்ப்புலமை வளர்த்ததும் (திரு.வி.க.) தமிழினத்தலைமை ஏற்றதும் (கலைஞர் மு.க.) தொழில் நலம் புரந்ததும் ஆரூரான்ஆலை அதிபர் தியாகராச முதலியார்…(அதையடுத்த சீர்காழியில் பிறந்தவர்) இசைநலம் பெருக்கியதும் அண்மைக் காட்சிகள்ஈ ஊர்ப் பெருமை இவர்களோடு சேர்ந்தது, இவர்களால் ஊருக்குப் பெருமை மிகுந்தது.

இந்தத் திருவாரூரிலே – வறுமையோடு வாழ்க்கை நடத்திய கிரு~;ணன் செட்டியர் – மீனாட்சி அம்மாள் தம்பதியரின் மூத்த ஆண்மகவாக 1920, பிப்ரவர் 12-இல் அனுச நட்சத்திர நல்லோரையில் பிறந்கவர்.  கல்யாணசுந்தரம் எனப் பெயரிடப்பட்டார்.  கல்யாணத்தின் உடன் பிறந்த சகோதரியர் இருவரும் பின்னர் காலமாகிவிட்டனர், கூடப் பிறந்த சகோதரர் இருவரின் பெயர்கள் – முத்தையா, சிவஞானம், கம்பராமாயணத் தசரதன் பேசும் மயில்முறைக் குலத்து உரிமைபோல, வீட்டில் மூத்தபிள்ளையாக இருந்த கல்யாணம் – இன்னலுக்கும் இடையூறுக்கும் நடுவே வளர்ந்தார்.  பெற்றோரின் பாசத்திற்கும் உடன் பிறந்தார் நேசத்திற்கும் இடையே பாலமாக நிற்கவேண்டிய அவசியத்தை உணர்ந்தார். தனக்கு அறிவு புலரத் தொடங்கிய நாள் முதல்- கல்யாணசுந்தரத்திடம் இந்த உணர்வும் வேரூன்றத் தொடங்கியது.  திருவாரூரில் காலூன்றிய குலமரபெனும் பந்தலிலே அந்த உணர்வு படர முற்பட்டது.

திரு.வி.கி.கல்யாண சுந்தரரின் ஜாதகக் குறிப்பு:

1920 பிப்ரவர் 12உ சித்திராத்திரி வருட தை மாதம் 30உ வியாழன் இரவு 10:30 மணி அளவில்

 

 

  
‘திருக்குறட்செம்மல்’ ந.மணிமொழியன். எம். ஏ.,
மேலாண்மை இயக்குநர்,
நியூ காலேஜ் ஹவுஸ்,
மதுரை – 1