வெற்றிச்செல்வர் V.K.K

ஆசிரியர்

‘திருக்குறள் செம்மல்’ ந.மணிமொழியன் 

  சு.குழந்தைநாதன்

எங்கள் இதயக் காணிக்கை

“அருங்குணத்தார் அறமுணர்ந்தார்
             அடக்கம் மிக்கார் அருஞ்செயலால்
தருங்கொடை பலவும் சால்புடைய
             தயானமும் தனிப்புகழும் கொண்டார்
திருவணிக வைசிய குலத்தார்
            செய்தொழில் அனைத்தும்
அருமையுடையது என்று அயராமல்
            கடமையாற்றி வெற்றி கண்டார்
பெருநிதிச் செல்வர் மலேசியப்
            பேரரசால் ‘.எம்.என்’ விருது பெற்றார்”
பொருந்தும் வகை உயர் கல்யாண
             சுந்தரம் எனப்புகழ் பெயர்பூண்ட
அருளுடையார்…”

 

என வாழ்த்தெடுக்கும் வண்ணம் வாழ்ந்தவர் எங்கள் குலப் பிதாமகர் உயர்திரு.வி.கே.கே.! பெருந்திருவும் பேரருளும் நிலைபெற்றிட மூன்று நாடுகளில் தொழிலால், தொண்டால் முன்னிடம் பெற்றவர் அவர்.

அரிய உழைப்பாலும் அடக்கமான உணர்வாலும்… அடுக்கடுக்காய் வளர்ந்து..  அடுக்கிய கோடிகள் தொகுத்தவர் அவர். அவ்வாறு மனத்திண்மையோடு மாறா உழைப்பும் நல்லுழும் ஒழுக்கமும் இறையருளும் இருந்தால் யாரும் முன்னேற முடியும் என வழிகாட்டியவர் அவர்.

பொருட்செல்வத்தை எட்டியதைப் போல, புகழ் நல்கும் அருட் செல்வத்தை, அறப்பணிச் செல்வத்தை ஈட்டுதற்கும் அவர் அள்ளி வழங்கி வந்தார்.  மலேசியாவில் ஈப்போ சுங்கை, அம்பாங், தாப்பா…ஹண்ட்லி ஆலயக்கொடைகளையும் தமிழ்நாட்டில்-திருவாரூர், மதுரை, சென்னனு-பம்மல் கல்விக் கொடைகளையும் வளர்நிதியமாக்கி வைத்தார்.  இத்திருப்பணிகள் என்றென்றும் நிலைத்திட, புதிய புதிய தொழில் முயற்சியில் துணிச்சலோடு இறங்கினார்; ஏழுபத்தைந்து வயதிலும் இளமைத்துடிப்போடு இரவு-பகல் எனப் பாராது உழைத்து வந்தார்.

சமுதாயம்-என்பது குடும்பங்களால் அமைவது, குடும்பம் என்பது மனைவி மக்களைக் கொண்டதாயினும் அந்த எல்லையையும் தாண்டி உறவு நாடி வளர்வது, வளர்ப்பது, கல்யாண சுந்தரர் வள்ளுவர் வாக்குப்படி.

“குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானைச்
சுற்றமாச  சுற்றும் உலகு!”
எனத்  தம் வாழ்வில் கண்டறிந்தவர்.

“ஆள்வினையும் ஆன்ற அறிவும் இரண்டின்
நீள்வினையால் நீளும் குடி…!”
எனத்  தம் குடியை உயர்த்தியவர்.

:”இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு..”
என விருந்தோம்பி மகிழ்ந்தவர்.
 

ஒரு மனையின் நன்கலம் நன்மக்கட்பேறு எனமக்களையும் மக்கள் வழிப்பெறுகளையும் மாண்பார் செல்வமாக, சிந்தை நிறை செல்வமாக மதிப்பவர்.

எளிமையாக வாழ்வைத் தொடங்கி, எதிர்நீச்சலிட்டு நிலை கொண்டு கனகச் செல்வம் குவித்தவர் அவர்.  ஆயிரம் இலட்சம் எனக் கணக்கிடுதலைத் தாண்டி…கோடிகள் என மனத்தாலேயே நிர்ணயிக்கும் அளவுக்கு உழைப்பால் உயர்ந்தவர் அவர்.  அடுக்கிய கோடிகள் பெறினும் குன்றுவ சிறிதும் செய்யாத குணநலத்தவர் அவர்.  அடக்கமானவர், அதிரப் பேசாதவர், அல்லும் பகலும் தொழில் சிந்தனையே கொண்டவர், எதையும் தானே நேரடியாகக் கவனிப்பவர்… என்றெல்லாம் அன்பர்களால் மதிப்பீடு செய்யப்பட்டவர் அவர்.

விரைவு, விரைவு, விரைவு என்பதுதான் அவரது வெற்றியின் ரகசியம், இன்று முடிக்கத் திட்டமிட்ட காரியத்தை நேற்றே முடிக்காமல் விட்டு விட்டோமே!’ எனக் கருதும் காரிய நாட்டமே அவரது சாதனைக்குரிய பின்னணி.

இந்தப் பின்னணியை முன்னணியாகக் கொண்டு அறுபதாண்டுகள் உழைத்து ஆலமரம்போல விழுது பரப்பி வந்தார்ஃ  அந்த விழுதுகள்-மூன்று நாடுகளில்…வணிக நிறுவனங்களாக, தேயிலை – ரப்பர்த் தோட்டங்களாக, விவசாயப் பண்ணைகளாக, விடுதிகளாக வளர்ந்தன் வளர்ந்து வருகின்றன.  உயரிய உழைப்பிற்கும் நல்லூழின் மேம்படத்துடிக்கும் ஒவ்வொருவருக்கும் செய்முறைப் பாடங்களைச் சொல்லுகின்றன.

பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ்வதே உயரிய வாழ்வு, குடும்பப் பாசம், தெழிலாளர் நேசம், தன் சமூகநலம், பொதுச் சமுதாய நாட்டம்-ஆகிய அமைத்துத் துறைகளிலும் பலருக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து ‘பெரியவர்’ என மதிக்கப்பட்டவர் வி.கே.கே அந்தப் பெருமையை அங்கீகரித்து-மலேசியப் பேரரசால்-கெசாத்ரியா மங்கு நெகரா (கே எம் என்) எனும் உயரிய விருதளிக்கப் பெற்றார்.  தமது புதல்வர்களுள் ஒருவர் ‘டத்தூ’ எனும் அரசப்பட்டம் பெற்று அரசியல் தலைமை பெற்று வருவதையும் தமது மருமக்கள்-சமுதாயத்தலைமை, இசை, மருத்துவப் பெருமை ஆகியன பெற்று வருவதையும் கண்டு நாளெல்லாம் உள்ளுரப்  புளகாங்கிதம் கொண்டார்.  இப்பெருமைகளுக்கெல்லாம் தம் பேரச் செல்வங்கள் வாரிசளாக வளர வேண்டுமென விரும்பினார்!.

நிறுவிய தொழில்களும் பெருகிவரும் குடும்பமும் நிலைபெறுவது-அடுத்து வரும் இரண்டாம் அணித்தலைமையைப் பொறுத்ததே ஆகும்.  நிறுவணத்தைத் தோற்றுவித்தவரின் இலட்சியங்களும் தொலைநோக்கும் சிதையா வகையில்-இரண்டாம் அணியினர்-தொழில்-குடும்பம் இரண்டையும் இரு சக்கரங்களாகக் கொண்டு வளர்ச்சிப் பயணத்தைத் தொடர வேண்டும்.  தலைமைப் பொறுப்பை ஏற்போர் கரங்களை வலுப்படுத்தி-வண்டிச்சக்கரங்களுக்குப் பாசமெனும் மசகு போடடு அமைபரும் மனப்பூர்வமாக ஒத்துழைக்க வேண்டும்.  குடும்பம் எனம் தடாகம் உயர உயர.. அதில் உள்ளம் எனும் மலர்களும் ஓராயிரமாய்ப் பூக்கும்…இவை எல்லாம் கல்யாண சுந்தரக் கருத்துரைகள்.

வெற்றிச் செல்வர் வி.கே.கே…சிறியன சிந்தியாதவர் பெரிதினும் பெரிதே விழையும் பெருமனத்தவர்.  அவரது தொழில் பெரியது, குடும்பம் பெரியது, குறிக்கோள் பெரியது சாதனை பெரியது…சரிதமும் பெரியது…

எவருக்கும் பிரமிப்பூட்டும் ஆலமரம்…அவரது எழுபத் தைந்தாண்டு வாழ்க்கை.  அந்த ஆலமரத்தின் விழுதுகள் விழுமியலல்; கிளைகள் திசையெங்கும் நீண்டு வளர்பவவ்; நிழல்கள் ஆயிரமாயிரவர்க்கும் புகலிடம் தருபவை; புதுத்தளிர் வீசிப் புதுப் புதுப்பறவைகளை அழைப்பவை…

அந்த ஆலமரம் தனது விழுதுகள் வேரூன்றி வந்த தருணத்தில் ஆயிரம் பிறை நலத்தோடு ஆசிர் பெறக்காத் திருந்த வேலையில் தம்மை மட்டும் விடுவித்தும் பொண்டு விட்டது.  விதியின் கோர விளையாட்டுக்குத் தன்னையும் உட்படுத்திக் கொண்டு விடடது.

விழுதுகள், கிளைகள், மலர்கள் எல்லாம், தம்மை ஆளாக்கிய அந்த ஆலமரத்தைப் பார்க்கின்றன.  இதுவரை அன்பால் மட்டும் பார்த்து வ்நததைவிட ஆராய்ச்சி  உணர்வோடு –  “அந்த ஆலமரம் எப்படி எல்லாம் வளர்ந்து உயர்ந்தது?” என அறிந்து கொள்ள ஆசைப்படுகின்றன.

அந்த ஆசையின் விளைவுதான், இந்த அரிய வரலாற்று நு}ல், வி.கே.கே. அவர்களின் அறுபதாண்டு மணிவிழாவினை ஆலவாய் அண்ணல் – அன்னை மீனாட்சி அருள் பாவிக்கும் மதுரையில் 1980-ல் கொண்டாடியகோது சிலம்புச் செல்வர் ம.பொ.சி.. வள்ளுவப் பேராசான் வ.சுப.மாணிக்கம் அசகுலச் செம்மல் முத்தையா செட்டியார், மேயர் முத்துசான்றோர் வி.கே.கே.யின; வாழ்வு பலருக்கும் விந்தகம் தரவேண்டிய புத்தமாக வேண்டும் என வற்புறுத்தினர்.  வி.கே.கே. யின் எழுபதாம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை மலேசிய அன்பர்கள் கொண்டாட முற்பட்டபோது நானும் பேராசிரியர் சு.குழந்தைநாதனும் ஒரு சிறிய வரலாறாக எழுதி அங்கு வெளியிடச் செய்தோம்.  அது விளக்கமான வரலாறாக இருந்தால் பலருக்கும் பயன்படும் என அப்போதே அன்பர்கள் கூறினர்.

அது பவளவிழாச் சமயத்தில் பலிக்க வேண்டும் எனக் கருதினோம்.  பேராசிரியர் சு.குழந்தைநாதன்- வள்ளல் அழகப்பர், கருமுத்து- தியாகராசர் உள்ளிட்ட சான்றோர் பலர் வரலாறுகளைச் சுவைபட எழுதிப் புகழ் கொண்டவர்.  வி.கே.கே.வரவாற்றையும எழுதித்தர முன் வந்தார்.  ஆனால் பெரியவர், புகழ்ப்புனைவு வேண்டாம் எனக்கருதி, எளிதில் இணங்கவில்லை.  எனினும் பேராசிரியர் மேற்கொண்ட பணியில் பின்னிடவில்லை.  சிங்கப்பூர் உலகத் தமிழ்ப் பேராசிரியர் மாநாட்டுப் பயணத்தின் போது, மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பல அரிய விவரங்களைத் திரட்டிக் கொண்டார்.  மதுரைக்கு வி.கே.கே. வரும் போதெல்லாம் பேட்டி கண்டு போதிய விளக்கங்களைத் தொகுத்துக் கொண்டார். “பெற்றிச் செல்வர் – வி.கே.கே.” எனும் தலைப்பிற்கு எல்லாவகையிலும் பொருந்தும் தலைமகனின் வரலாறாக இதை எழுதித் தந்துள்ளார்.

நீங்கா நிழலும் நிறைவான பயனும் தரும் பழுமரத்து வாழ்வு பார்போற்றும் வாழ்வு என்கிறது நாம் படிக்கும் நாலடியார்…

“அழல் மண்டு போழ்தின் அடைந்தவர்கட்கெல்லாம்
நிழல் மரம்போல் நேரொப்பத்தாங்கி-பழுமரம்போல்
பல்லார் பலன் துய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே
நல்லாண் மகற்குக் கடன்…..”

நாலடியார் நீதியை நல்ல வாழ்க்கை நியதியாகக் கொண்டவர் வி.கே.கே. அதனால் அவர் “வெற்றிச் செல்வர்” ஆனார்.  வெற்றி பெற விழையும் அனைவருக்கும் வழிகாட்டி ஆனார்.

அரியதொரு வாழ்க்கையை இனியதொரு இலக்கியமாக்கித் தந்துள்ள எங்கள் பேராசிரியர்க்கு நன்றி கூறி, இந்த நு}லை வி.கே.கே. அவர்களின் அமரத்துவ அஞ்சலி மலராக அர்ப்பணிக்கிறோம்.  வெற்றிச் செல்வர் வகுத்த பாதையில் வீறுநடை போடுவோம் என உறுதியளிக்கிறோம்.

.
  
‘திருக்குறட்செம்மல்’ ந.மணிமொழியன். எம். ஏ.,
மேலாண்மை இயக்குநர்,
நியூ காலேஜ் ஹவுஸ்,
மதுரை – 1